Dr. ரவிசங்கர் MD DCH
குழந்தைகள் மருத்துவமணை.
தெற்குவாசல் . மதுரை.
குழந்தைகள் கோடைகாலங்களில் வாந்தி பேதியால் அதிகமாக அவதிக்குள்ளாகின்றனர் . குறிப்பாக ஜன நெரிசல் அதிகமாக உள்ள இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பது மற்றும் சுகாதார பிண்ணடைவு காரணமாக , வாந்தி பேதி நோய் அதிகமாக பரவுகிறது . குடி தண்ணீரில் உல்ல கிரிமிகலால் தான் பொதுவாக வாந்தி பேதி நோய் ஏற்படுகிறது. கோடைகால வெப்பம் அல்லது பருவ நிலை மாற்றம் காரனமாக வாந்தி பேதி ஏற்படுவதே இல்லை .
ரோடா வைரஸ் ( 40% ) கிருமி , பாக்டீரியா கிருமியால் தான் பல நேரங்கள் இந்த நோய் ஏற்படுகிறது.
அவ்வாறான கிருமிகள் குழந்தைகளின் குடலில் புண் ஏற்படுத்தி பேதி ஏற்படுகிறது. பேதி காரணமாக உடம்பில் உள்ள தண்ணீர் வீனாகி குழந்தை சோர்ந்து விடுகிறது .
குழந்தையின் உடல் நிலை மோசமாவதற்கான காரணங்கள்
1.உடம்பில் உள்ள தண்ணீர் வீணாவது ( dehydration )
2.பேதியின் போது குழந்தைக்கு வாய் வழியாக எதுவும் தராமல் இருப்பது.
3.தாய்பாலை நிருத்தி வைப்பது.
4.தீய உணவு வகைகளை குழந்தைகளுக்கு தருவது.
பேதி போகும் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்
1.ORS சர்க்கரை , உப்பு கரைசல் தண்ணீர் ( electral , relyte ors ) பேதி ஆகும் குழந்தைக்கு மிகவும் நல்லது.
2.பேதி போகும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம் .
3.பால்புட்டி பயன்படுத்தக்கூடாது . உணவு ஸ்பூனில் அல்லது பாலாடையில் கொடுக்க வேண்டும்.
4.குழந்தைக்கு உணவு மற்றும ORS ஸ்பூனில் மெதுவாக கொடுக்க வேண்டும் . ஒரு நிமிடத்திற்கு ஒரு ஸ்பூன் வீதம் கொடுக்க வேண்டும் .
5.அரிசி கஞ்சி , இட்லி, இடியாப்பம் , ஆரோரூட் கஞ்சி, பார்லி கஞ்சி , ஜவ்வரிசி கஞ்சி கொடுக்கலாம் .
6.வேகவைத்த வாழைக்காய் மசித்து கொடுக்கலாம் .
7. இளநீர் – பேதி போகும் குழந்தைக்கு மிகவும் நல்லது .
8. சுத்தமான தண்ணீரில் தயாரித்த பலச்சாறு, வாழைப்பழம் , ஆப்பிள் போன்ற பழங்கள் தரலாம்.
9. புளிக்காத தயிர் , மோர் தரலாம்.
10.குழந்தைக்கு பேதி குறைந்தது 5 நாடகள் வரை நீடிக்கும் . பேதியினால் குழந்தை இழக்கும் நீரச்சத்தைகொடுப்பதும், சரியான உணவு கொடுப்பதுமே குழந்தை விரைவில் குணமாக உதவும்
நன்றி.
சந்தேகங்களுக்கு email : [email protected]
9790273421